Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்னவே, இந்த புதிய பணிப்பாளர் நாயகமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
நேற்று வியாழக்கிழமை (10) மாலை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
கடந்த 25 வருடங்களாக, சட்டமா அதிபர் அலுவலகத்தில் சேவையாற்றிய சரத் ஜயமான்ன, இப்புதிய பணிப்பாளர் நாயகமாக பதவியேற்க முன்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிஸ்டர் ஜெனரலாகப் பதவி வகித்தார்.
தடயவியல் விஞ்ஞானம் தொடர்பான பட்டப்படிப்பை, ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட இவர், ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தை மேற்கொண்டார்.
இலங்கையில், டீ.என்.ஏ மற்றும் அலைபேசி சாட்சியாளர்களைக் கண்டுபிடித்தல் போன்ற முக்கியப் பணிகளை இவர் ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago