2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் காலியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனது அலுவலகத்தில் வைத்து ஒரு இலட்ச ரூபாயை இலஞ்சமாகப் பெற்றப் போது குறித்த அதிபர் கைதுசெய்யப்பட்டு, காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இந்த மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முதலாந் தரத்துக்கு மாணவியொருவரை இணைத்துக்கொள்வதற்காகவே கைது செய்யப்பட்டுள்ள அதிபர் இவ்வாறு இலஞ்சம் பெற்றுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .