Janu / 2026 மார்ச் 31 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டுதாரர்களுக்கு கட்டணமின்றி 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா (Free Tourist Visa) வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 2025-07-21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஆரம்பக்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட இதற்கான வரைவு உத்தரவுகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது இறுதி அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago