2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலவசம் இல்லை: ஜனாதிபதி அதிரடி

Editorial   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது. வேலை செய்ய முடியாத அரச பணியாளர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானவர்களை உடனடியாக விலக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வேலைச் செய்வதாயின் வேலை செய்யவும், முடியா​து என்றால் வீட்டுக்குச் செல்லவும் என கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச பணியாளர்களுக்கு இலவசமாக சம்பளம் கொடுப்பதற்கு தாம் தயாரில்லை என்றார்.

“யாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது, ​ஏதாவது செய்யவேண்டும்.  எனக்கும் இலவசமாக சாப்பிட முடியாது. இந்த நாட்டை நான் அபிவிருத்தி செய்யவில்லை என்றால், நானும் வீட்டுக்குச் செல்லவேண்டும். ஆகையால், நாங்களே முதலில் பயணத்தை ஆரம்பிக்கவேண்டும் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையுமாறு நான் யாரையும் அழைக்கவில்லை. எனினும், நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு சகலருக்கும் நான் அழைப்பு விடுகின்றேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .