2025 ஜூலை 19, சனிக்கிழமை

இலாபகரமான சேவையை வழங்க கால அவகாசம்

Freelancer   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ மேலாளர்களுக்கு இலாபகரமான மற்றும் தரமான சேவையை வழங்க அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்யாத நபர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

தற்போது, 107 SLTB டிப்போக்கள் இயங்குகின்றன.

இதில் இலாபம் ஈட்டும் சுமார் 60 டிப்போக்கள் மட்டுமே உள்ளன.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, சுமார் 20 SLTB டிப்போ மேலாண்மை பதவிகள் மட்டுமே வேறு நபர்களால் நிரப்பப்பட்டதாக, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.AN





 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X