S.Renuka / 2026 மார்ச் 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற போது, குறித்த நால்வரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தஞ்சம் புகுவதற்குப் பதிலாக, பொது இடத்தில் நின்றவாறு தாக்குதலைப் படம்பிடிக்க முயன்றுள்ளனர். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன.
காயங்கள் குறித்த விபரம்:
இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார கருத்துத் தெரிவிக்கையில்,
"ஏவுகணை வீச்சினால் அருகில் இருந்த கட்டிடங்களின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியுள்ளன. இதில் தலையிலும் உடலின் ஏனைய பகுதிகளிலும் கண்ணாடிச் சில்லுகள் குத்தியதில் நால்வரும் காயமடைந்துள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்."
பாதுகாப்பு அறிவுறுத்தல்:
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
ஏவுகணைத் தாக்குதலுக்கான அபாயச் சங்கு (Siren) ஒலிக்கப்பட்ட மூன்று நிமிடங்களுக்குள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், இக்கட்டான சூழலில் இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
31 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
52 minute ago
1 hours ago