2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஈசி கேஸ் பண மோசடி; மூவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈசி கேஸ் மூலம், 1.1 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட மூவர், கல்கி​ஸைப் பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டி, கொலன்னா,​ மாவனெல்ல  பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து குறித்த சந்தேகநபர்கள், கல்கிஸை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், அலைபேசி நிறுவனம் ஒன்றின் மூலம் போட்டி நிகழ்ச்சியொன்றை நடத்தி இந்த பண ​மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X