2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

’ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும்’

Freelancer   / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் ​- அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்​களுக்கு நிறுத்தப்​படு​வ​தாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று அறிவித்​தார்.

இந்​நிலை​யில் இந்​தி​யத் தூதரகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்​தி​யத் தூதரகத்தை தொடர்​பு​கொண்​டு, அவர்​கள் பரிந்​துரைக்​கும் வழித்​தடங்​களை பயன்​படுத்தி ஈரானிலிருந்து வெளி​யேற வேண்​டும். இதன்​மூலம் அவர்கள் பாது​காப்​பாக வெளி​யேற முடி​யும்.

அதே​நேரத்​தில் தூதரக அதி​காரி​களை கலந்து ஆலோசிக்காமல் சர்​வ​தேச தரை வழி எல்​லையை கடந்து செல்​லும் முயற்​சி​யில் இந்​தி​யர்​கள் ஈடுபட வேண்​டாம் என்று இந்​தி​யத் தூதரகம் அறி​விப்​பில் கூறி​யுள்​ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .