2025 ஜூலை 30, புதன்கிழமை

’ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யவும்’

Freelancer   / 2022 ஜூன் 02 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி 13 ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். 

அவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. விடுதலை செய்தால் தாய்நாட்டுக்குச் சென்று சொந்தங்களுடன் வாழவே அவர்கள் விரும்புகின்றனர். காரணமே இல்லாமல் சிறப்பு முகாம்களில் அவர்களை அடைத்து வைப்பது மனித உரிமை மீறலாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

சிறப்பு முகாம் என்பது முகாம் அல்ல. அது சிறையை விட கொடுமையானது; மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாகும். கடந்த காலங்களில் பல முறை அவர்கள் போராடிய போது விரைவில் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, இன்றைக்கு வரையிலும் விடுதலை செய்யவில்லை என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .