Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 09 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான விசேட செயற்றிட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நேற்றைய தினம் (08) கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத் தொகுதியில் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் ந.புகழ்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க. விமலநாதன் கலந்து சிறப்பித்தார். அத்தோடு உலக உணவுத்திட்டத்தின் திட்டக்கொள்கை அதிகாரி கிறான்போல் சிறப்பு அதிதியாக கலந்திருந்தார்.
உலக உணவுத்திட்டத்தின் அனுசரனையிலும் சர்வோதயம் நிறுவனத்தின் ஒத்துழைப்பிலும் செயற்படுத்தப்படும் இந்த உணவுப்பாதுகாப்புத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 19890 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025