Freelancer / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவருடைய சாரதி அனுமதிப்பத்திரமும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதவான் பிரியந்த லியனகே அனுமதி வழங்கினார்.
மேலும், விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதிக்கு 80,000 ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு பிரதிவாதி தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
ராஜகிரிய மேம்பாலத்துக்கு அருகில், உமாரியா பயணித்த சொகுசு ஜீப் வண்டியும் முச்சக்கரவண்டியும் நேற்றையதினம் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே மேற்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago