2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

உயரதிகாரியைக் காப்பாற்ற தலா 100 ரூபாய் வசூலிப்பு

Gavitha   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவி பொலிஸ் அதிகாரி தமிந்த தர்மரத்னவுக்கு உதவிசெய்யும் நோக்கில், 100 ரூபாய் வசூலிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் பின்னர் இளைஞனொருவன் மரணமடைந்த சம்பவத்தையடுத்தே, உதவி பொலிஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தங்களைப் பொலிஸார்
என்று அடையாளங் காட்டிக்கொள்ளும் ஒரு பிரிவினரே, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய நகரங்களில் இவ்வாறு பணம் வசூலிப்பதாக அறியமுடிகின்றது என்றும் அத்தகவல் தெரிவித்தது.

உதவி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலர், நட்பு ரீதியில், பணத்தைச் சேர்த்து அவருடைய குடும்பத்துக்கு வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகள் இரண்டிலும், சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், தலா 100 ரூபாயை வலுக்கட்டாயமாக வசூலிப்பதாக பொலிஸார் சிலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகரவிடம் வினவியபோது, அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தனக்கு அறிக்கையெதுவும் கிடைக்கவில்லை என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .