2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘உயர்நீதிமன்றம், ஜனாதிபதிக்கு கேள்வியெழுப்பும் அதிகாரம் இல்லை’

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

பிரதமர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கும் முன்னாள் லக்‌ஷ்மன் கிரியெல்ல, நிலையியற் கட்டளையின் பிரகாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஏற்றுக்கொண்ட பிரேரணை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரம் ​உயர் நீதிமன்றத்துக்கோ, ஜனாதிபதிக்கோ இல்லை என்றும் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

சபாநாயகரின் அறிவிப்பின் பிரகாரம், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மற்றும் பிரதமர் பதவியிழக்கப்பட்டதன் பின்னர், அமைச்சுகளின் செயலாளர்களும் பதவியிழப்பர் என்று தெரிவித்த அவர், பெரும்பான்மை இல்லாத ஒருவருக்கு ஜனாதிபதி, பிரதமர் பதவியை வழங்கியமையால் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைவாக ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் அது குறித்து கேள்வி எழும்பும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கும் இல்லை. ஜனாதிபதிக்கும் இல்லை என்றார்.

அதேபோல், தான் நினைத்தவரை ஜனாதிபதி, பிரதமராக்கிவிட முடியாது என்று தெரிவித்த அவர், அரசியல் குழப்ப நிலைமைகளின் ​போது செயற்படும் விதம் தொடர்பில் இலங்கை அரசமைப்பில் குறிப்பிடப்படாமல் இருக்கும் பட்சத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயங்களைப் பின்பற்ற வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய பெரும்பான்மை உள்ளவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனை பொருட்படுத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .