Gavitha / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 11 கைதிகளின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்ற நீதிபதி, நான்கு பேர் கொண்ட குழுவுக்கு, இன்று (09) உத்தரவிட்டார்.
உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் மீது பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமிக்க சட்டமா அதிபர் திணைக்களம், நீதவான் நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை ஏற்கெனவே சமர்ப்பித்திருந்தது.
இந்தக் குழுவில் மூன்று மூத்த நீதித்துறை மருத்துவ அதிகாரிகளும் அரசாங்க ஆய்வாளர் துறையின் ஒரு நிபுணரும் உள்ளடங்குவர் என்று சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.
கலவரத்தில் இறந்த 11 கைதிகளில் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தெற்கு ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது. இந்த உடல்களில் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்ற உத்தரவு உத்தரவு வேண்டும் என்று, பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கலவரத்தின் போது சில கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் உயிரிழந்தனர் என சிறை அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த கைதிகளின் சடலங்கள் மீது பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் முக்கிய தகவல்களை கிடைக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago