Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுக்க முடியாமற்போனமை குறித்துக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு சட்டரீதியானதென, நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கு முன்னால் முன்னிலையாகி சாட்சியமளிக்கத் தான் தயாரென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த காரணங்கள் அடிப்படையற்றவை என்பது, அந்தப் பிரேரணை தோல்வியுற்றதிலிருந்து தெரிவதாகவும், பிரதமர் கூறினார்.
ஊடகங்களுக்கான விசேட அறிவிப்பொன்றை விடுத்து இன்று (12) உரையாற்றிய பிரதமர், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
“தாக்குதல்கள் நடத்தப்பட்ட உடனேயே, பாதுகாப்புப் பிரதானிகளைச் சந்தித்த நான், உடன் நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்கினேன். அன்று நாங்கள் எடுத்த உடனடி நடவடிக்கைகள் காரணமாகத்தான், தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரையும், சட்டத்தின் முன் நிறுத்த முடிந்துள்ளது.
“இது விடயத்தில், எம்முடைய பாதுகாப்புத் தரப்பினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அழிவடைந்த சொத்துக்களை மீண்டும் கட்டியெழுப்பவும், எங்களுடைய அமைச்சர்கள், பாடுபட்டு உழைக்கின்றனர். இவை, முறையான வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதையும், இந்த நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது” என்றும் பிரதமர் கூறினார்.
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago