Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 12 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அதில் ஒருவர் மட்டும் உயிருடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடம், குடியிருப்புப் பகுதி என்பதால், அங்கிருந்த கட்டடங்களிலும் தீப்பற்றி எரிந்துள்ளன.
மேலும் இந்த விபத்தில் கட்டடத்தில் இருந்த ஐவரும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் ரமேஷ் விஸ்வாஷ்குமார். அவர் இருக்கை எண் 11A இல் இருந்தார். இவர் விமானம் விபத்துக்குள்ளாகும் போது விமானத்திலிருந்து குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. R
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago