Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டத்தின் வாயிலாக, அரசமைப்பு ரீதியாகத் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரித்துகளைப் பெற்றுக்கொடுப்பதையே, தனது அரசியல் முன்னெடுப்புகளில் முதன்மைப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும், தனது விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
வவுனியாவில் நேற்று (02) நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
த.தே.கூவின் உயர்நிலை அங்கத்தவர்கள், “கிடைப்பதை எடுப்பதே உசிதம்” என்று வாழ்ந்து வருகின்றனர் என விமர்சித்த அவர், அவர்களுக்குத் தனது நடவடிக்கைகள் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்க்க முடிகிறது எனத் தெரிவித்தார். எனினும் தனது செயற்பாடுகள், 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் போது, மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன எனத் தெரிவித்த அவர், “எமது மக்களின் விடிவுக்காக, அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காக, அவர்களுக்கான உரித்துகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம்.
“இந்த நாட்டில், தமிழ் மக்கள் சகல உரித்துகளுடனும், சமஷ்டி முறையிலான அரசியல் கட்டமைப்பொன்றின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago