Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அரச தொழில்முயற்சி சபை, சட்ட நிறுவனங்கள் மற்றும் அரச வணிக நடவடிக்கைகளுக்குத் தகுந்த நபர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவினாலேயே 200 இற்கும் அதிகமான அரச நிறுவனங்களுக்கான பரிந்துரைகள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்களுக்குத் தகுதிவாய்ந்தோரின் பெயர்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைப்பதற்கு, சிரேஷ்ட அதிகாரியான சுமித் அபேசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
சுசந்த ரத்னாயக்க, கலாநிதி நாலக்க கொடஹேவா, டயன் கோமஸ், டொக்டர் பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் குறித்த குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago