Niroshini / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அரசியலமைப்பின், 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படாத உறுப்புரையை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலமே, தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்” என, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகள், மூன்றிலிருந்து இரண்டாகக் குறைப்பதற்கு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவறான விடயமாகும் என்றும் குறிப்பிட்டார்.
“இது உறுப்பினர்களின் சுதந்திரத் தன்மையைப் பறிப்பது போல் உள்ளது. இது வெறும் திருத்தமாகக் கொண்டு வரப்பட்டதே ஒழியே, முற்றுமுழுதாகக் கொண்டு வரப்படவில்லை. எனவே, இந்த யோசனையை, ஜே.வி.பி எதிர்க்கிறது. இந்த யோசனையை கொண்டுவர நாம் இடமளிக்கப்போவதில்லை. “இதேவேளை, நாடாளுமன்ற பதவி தற்போது தட்டில் வைத்து ஏலத்தில் விடப்படுவதுபோல ஏலம் விடப்படுகிறது. அரசியல் கட்சிகள் மாறி மாறி பிரிதொரு அரசியல் கட்சி உறுப்பினர்களை பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இணைத்துக்கொள்ள எத்தணிக்கின்றன.
“மக்கள் ஆணைக்கு மீறும் வகையிலேயே கட்சித் தாவல்கள் இடம்பெறுகின்றன” என அவர் தெரிவித்தார்.
4 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
26 Jan 2026