J.A. George / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தெங்கு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தினால் 50சதவீதத்தால் உற்பத்தியை அதிகரிக்க முடியுமென துறைசார் நிபுணர்களும் உற்பத்தியாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நுகர்வோர் அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனைகளின் போது எமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காயெண்ணெயில் 70மூ வீதமானவை தேங்;காயெண்ணெய் அல்லாத வேறு பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உற்பத்தில் செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் தற்போது தெங்கு உற்பத்திக் கைத்தொழில்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் தோன்றியுள்ளன.
இலங்கையின் தெங்கு மற்றும் தெங்கு உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானம் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் 16.6சத வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதனால் அரச அனுசரணையுடன் தெங்குக் கைத்தொழிலில் புதிய போக்குகளை ஏற்படுத்த முடியுமென்பது தெரியவந்துள்ளது.
அதற்கமைய, தெங்கு உற்பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கைத்தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த கீழ்காணும் கூட்டு முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• தேங்காயெண்ணெய் இறக்குமதி செய்வதற்குப் பதிலாக உள்ளுர் தேங்காயெண்ணெய் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மூன்று மாதகாலம் துண்டுகளாக்கப்பட்ட உலர் தேங்காயை இறக்குமதி செய்தல்
• தவிட்டுடன் கூடிய துண்டுகளாக்கப்பட்ட உலர் தேங்காய் இறக்குமதியை அரசுக்குச் சொந்தமான பீ.சீ.சீ நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளல்
• நுகர்வோர் உரிமையையும் இலங்கைத் தேங்காயெண்ணெயின் குறியீட்டு நாமத்தை பாதுகாக்கும் நோக்கில் தேங்காயெண்ணெய்க்கு பாம் எண்ணெய் அல்லது வேறு எண்ணெய் வகைகளைக் கலப்படம் செய்து விற்பனை செய்தலை முற்றாகத் தடை செய்தல்
• நாட்டில் பாம் எண்ணெய்ப் பாவனையைக் குறைத்து தேங்காயெண்ணெயைப் பாவனையை ஊக்குவித்தல் அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்ளையென்பதை ஏற்றுக்கொண்டு நுகர்வோர் உரிமை மற்றும் சுகாதாரக் காரணிகளின் அடிப்படையில் தூய்மையாக்கப்பட்ட பாம் எண்ணெயை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கல்
• தெங்கு உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன்தொகையை மீளச் செலுத்துவதற்காக சலுகைகள் வழங்கல்
• தெங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்காக ஊடுபயிர்ச் செய்கை, பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு மற்றும் நீர் வழங்கல் போன்ற தெங்குப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கிலான சலுகை பொதிகளை அறிமுகம் செய்தல்
• இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் ஏற்புடைய அமைச்சு மற்றும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சின் உள்ளக செயலணி ஒன்றை அமைத்தல்
ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago