2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உள்ளக நஞ்சாவதைத் தடுத்தல் வாரம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நஞ்சு நிவாரண வாரம், எதிர்வரும் 14ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

நஞ்சேற்றப்பட்டமை காரணமாக 2015ஆம் ஆண்டு கூடுதலானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதனால் இந்த வாரத்துக்கு 'உள்ளக நஞ்சாவதைத் தடுத்தல்' என்ற தொனிப்பொருள் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய நஞ்சு மற்றும் விஷ தகவல் மையத்தின் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் வருண குணதிலக தெரிவித்தார். 

எலிப்பாசணம், நுளம்புச்சுருள் மற்றும் மலசலகூடங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திரவங்கள் ஆகியவற்றினால் உள்ளக நஞ்சாவது அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .