Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Simrith / 2025 மார்ச் 09 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக மொத்தம் 57 சுயேச்சைக் குழுக்களும் 18 அரசியல் கட்சிகளும் இதுவரையிலும் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
168 உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதுடன், செலுத்தும் காலம் மார்ச் 3 ஆம் திகதி தொடங்கி மார்ச் 19 ஆம் திகதியுடன் முடிவடையும்.
உள்ளூட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகும்.
மேலும், தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க தேசிய தேர்தல் ஆணைக்குழு ஒரு சிறப்பு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை அமைச்சக செயலாளர்கள், மாகாண சபைகள், கட்சி பொதுச் செயலாளர்கள், ஆணைக்குழுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
20 May 2025