2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர் ‪சிவராம்‬ கொலைக்கு நீதிகோரி நாளை ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ‪சிவராம்‬ கொல்லப்பட்டு 11 வருடங்களாகும் நிலையில், அவரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்து, ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிக்காக, நியாயத்துக்காக போராடவேண்டியதற்கு பதிலாக நன்கொடை, நற்சான்றிதழ் வழங்கப்பட்டுவரும், பெறப்படும் இந்த காலப்பகுதியில் கொலைகளுக்குப் பொறுப்பானவர்களை கைதுசெய்ய, அழுத்தம் கொடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவராம் மற்றும் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்காக அரசாங்கத்திடம் நீதிக்கோரியும் சிவராம் கொலை தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளன.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை முஸ்லிம் மீடியா போராம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இளம் ஊடகவியலாளர் சங்கம், ஊடக ஊழியர் சேவை தொழிற்சங்க சம்மேளனம், ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து ஆதரவு தெரிவிக்கும் ஏனைய அனைத்து தொழிற்சங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன.

மேலதிக விவரங்களை, சம்பத்  0777248304, லசந்த 0773124856, லங்காபேலி 0773641111 ஆகியோரின் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X