2025 மே 21, புதன்கிழமை

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Freelancer   / 2022 ஜூன் 18 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க மல்லாவி  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று  (17) எரிபொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என்ற பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று  அதிகாலை முதல் 2 கிலோ மீற்றர்களுக்கு அதிகமான நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

குறித்த செய்தியினை சக ஊடகவியலாளருடன் அறிக்கையிட சென்ற சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன்  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் அங்கு மதுபோதையில் வருகை தந்த நபரொருவரால் தாக்குதலுக்கு உள்ளாகினார்.

அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரை போலிஸார் எச்சரித்ததுடன் ஊடகவியலாளரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X