Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தக்கூடிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் முறையான நடைமுறையை பின்பற்றுமாறு இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம், பொலிஸாரிடம் கோரியுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிர்வாக இயக்குநர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புக்கான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் வீதிகளில் அதிகளவானவர்கள் பயணிப்பதை காணமுடிவதாக அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலான வாகனங்களில் அத்தியாவசிய சேவைகள் என்று பெயர் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில வாகனங்களில் அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்களில் பெயர்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாகனங்கள் ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ள நிலையில், ஏதாவது ஒரு அத்தியாவசிய தேவையினை காண்பித்து அதிகளவான அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக இடைவெளியே கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் சிறந்த நடைமுறை என்ற நிலையில், இவ்வாறான அதிகளவில் அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படுவது ஆபத்தான ஒன்றாகும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
24 minute ago
50 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
50 minute ago
58 minute ago