2026 மே 09, சனிக்கிழமை

ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அதிக அவதானமிக்க வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில்  அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு உத்தரவு, நாளை (16) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, பி.ப 4.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு 20 ஆம் திகதி காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும் எனவும், அதனை தளர்த்துவது குறித்து பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .