J.A. George / 2020 நவம்பர் 06 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 26 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 2,532 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
மேலும், 382 வாகனங்களும் கைப்பற்றப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றச்சாட்டுகளில் இதுவரை 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .