2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஊழல், மோசடிகளை விசாரிக்க விசேட நீதிபதிகள் குழு

Princiya Dixci   / 2017 ஜனவரி 05 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

விசேட நீதிபதிகள் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.

  ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றே இவ்வாறு நியமிக்கப்படவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக்கூறினார்.  

இலஞ்ச மோசடி, பயங்கரவாத நடவடிக்கைக்கு என தனித்தனியாக காணப்பட்ட குற்றவியல் நீதி ஆணைக்குழுவை போன்று இந்த விசேட நீதிமன்றம் உருவாக்கப்படவுள்ளது. 

சாதாரணமாக முறைப்பாடு செய்து வாக்குமூலம் பெற்று நடவடிக்கை எடுக்க நீண்ட காலம் செல்லும். அதனை தவிர்த்து விரைவில் நடவடிக்கை எடுக்கவே இது உருவாக்கப்படவுள்ளது. குற்றச்சாட்டானது விசாரணைக்கு உட்படுத்தப்பட தகுதியானதா என்றும் இந்த விசேட நீதிபதிகள் குழுவினாலேயே தீர்மானிக்கப்படும்’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .