2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

’எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே’ ஈரானுக்கு ஆதரவாக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2026 மார்ச் 06 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய இராணுவத் தாக்குதல்களைக் கண்டித்து, 'எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே' (No Blood for Oil) எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று 06 ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், இப்பிராந்தியத்தில் நிலவும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தியும் ஏராளமான ஆர்வலர்களும் ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்தில் திரண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என இதன்போது கோசமிட்டனர்.
அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்கும் போர் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையில் ஈரானுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .