2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

எண்ணெய்த்தாங்கிகளில் தகரம் வெட்டிய 8 பேர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனத்துறைமுகத்தில், எண்ணெய்த்தாங்கி தொகுதியில், இரண்டு தாங்கிகளை வெட்டி, இரும்புத் தகரங்களை எடுத்துச்சென்ற 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாங்கிகள், ஐ​.​ஓ.சி நிறுவனத்துக்கு உரிய இடத்திலேயே உள்ளது. அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே, மேற்படி எட்டுப்பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டி அகற்றப்பட்ட இரும்பு தகரங்களும் கைப்பற்றப்பட்டன. அந்த இரண்டு தாங்கிகளுக்கும் 90 இலட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது என ஐ.​ஓ,சி நிறுவனம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .