2025 மே 17, சனிக்கிழமை

எதிர்ப்பு தெரிவிக்க அவகாசம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்குவதற்கு எதிராக எதிர்ப்பு இருக்குமாயின் அவற்றை இம்மாதம் 16ஆம் திகதியன்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவருமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கோரியுள்ளது.

சட்டமா அதிபருக்கே நேற்று திங்கட்கிழமை இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்குமாறு கோரி அவரது மனைவி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே மேல்நீதிமன்றம் மேற்கண்டவாறு கோரியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .