2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

எதிர்காலத்திலும் ரணில்- ராஜபக்‌ஷ கூட்டணியே அமையும்

R. Yasiharan   / 2022 டிசெம்பர் 16 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உருவாக்கப்பட்ட அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்கின்றது. இந்த அரசாங்கம் ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கம் என்பதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என ஆளுங்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இப்போதும் ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கமே ஆட்சி செய்து வருகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள ராஜபக்‌ஷ  அணியும், ரணில் விக்கிரமசிங்க என்ற தனி ஒருவரும் இணைந்து அரசாங்கத்தை கொண்டு செல்கிறோம். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இரு தரப்பும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியும். இதன்போது  மேலும் பல கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். 

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ  ஆகிய இருவருமே அனுபவம் வாய்ந்தவர்கள். எமது அணியும் அனுபவம் மிக்க அணியாக உள்ளது. ஆகவே இருவரும் இணைந்து பயணிப்பதுடன் மேலும் ஏழு அல்லது எட்டு கட்சிகளை ஒன்றிணைத்து  பயணிக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X