Editorial / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

” வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்” என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதப்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவியான பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (17) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் “பிரபல உணவு தயாரிப்பு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு உணவு வழங்கும் மாதம்பட்டி ரங்கராஜ் என்னையும், என் குழந்தையையும் நீதிமன்றம் வரவழைத்து விட்டார். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம். அதற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. பல்வேறு காவல் நிலையங்களுக்கு திசை திருப்பிவிட்டு என்னை அழைக்கழிக்க வைக்கின்றனர். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மாதம்பட்டி ரங்கராஜ் தான் என் குழந்தைக்கு தந்தை என பொறுப்பேற்க வேண்டும்” என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
5 minute ago
38 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
38 minute ago
6 hours ago