R.Maheshwary / 2021 மார்ச் 16 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சியில், நீதி அமைச்சராக இருந்த என்னை, அமைச்சரவையிலிருந்து அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீக்கியது ஏன் என்பது தொடர்பில் விளக்கமளித்துள்ள ஆளும் கட்சியின் எம்.பியான விஜயதாஸ ராஜபக்ஷ, ரணிலுக்கு நாட்டை விடவும் பெரும்பான்மையே பெறுமதியானது என்றும் தெரிவித்துள்ளார்.
அன்றைய பாராளுமன்றத்தில் இருந்த 17 பேரடங்கிய முஸ்லிம் எம்.பிக்களின் குழுவொன்றே, இந்தச் சதிவலையின் பின்னால் இருந்தது எனத் தெரிவித்த விஜயதாஸ, பெரும்பான்மையை இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதாலேயே, பிரிவினைவாத முஸ்லிம் பிரதிநிதிகளின் அழுத்ததுக்குக் கட்டுப்படவேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது என்றார்.
எம்புல்தெனிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தொடர்ந்து உரையாற்றும்போது தெரிவித்ததாவது:
பொறுப்பு மிக்க நீதி அமைச்சர் என்ற ரீதியில்இ நாட்டில் குண்டை வெடிக்க வைத்து, இரத்தம் சிந்த வைக்கும் முயற்சிகளில் சஹ்ரானின் குழுவினர் 32 பேர் செயற்படுவதாகக் கூறினேன். ஆனால், ஒரு தீவிரவாதியும் வஹாப்வாதியும் இல்லையென அன்று கூறியிருந்தனர் எனத் தெரிவித்த விஜயதாஸ, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 271 உயிர்களுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஹிஸ்புல்லா, ராஜித, முஜிபுர், ரிஷாட் ஆகியோரிடம் கேட்டார்.
தீவிரவாதிகளுக்காக, பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தவர் அசாத் சாலியென இப்போதும் கூறுகின்றேன். எனவே, இதைக் கண்டுபிடிப்பதில் பொலிஸாருக்கு உள்ள பிரச்சினைதான் என்ன? பொலிஸார் ஆரம்பத்திலிருந்து தமது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளனர் என தெரிவித்த அவர், இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காத ஆணோ பெண்ணோ இங்கு இருப்பார்களாயின் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வகையிலான சட்டத்தை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.
58 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago