Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் பொருட்டே, சல்மான் இராஜிநாமச் செய்யவுள்ளார் எனத் தெரிய வருகிறது.
மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் - செயலாளர் நாயகம் ஹசன்அலிக்கும் இடையில், நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது, ஹசன்அலி உடனடியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், ஒருமாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டைக்கூட்டி, அதன்மூலம் - முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியையும் வழங்குவதாக ஹக்கீம் உறுதியளித்திருந்தார் எனத் தெரியவருகிறது.
மு.காங்கிரஸின் செயலாளர் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வுகாணும் பொருட்டு, ஹசனலியுடன் இவ்வாறானதொரு சமரசத்துக்கு மு.கா. தலைவர் வந்துள்ளார்.
இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை காலை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை, மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர் ஆகியோர் சந்தித்திருந்தனர்.
7 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago