Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 27 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிப்பிட்டியவில் இரவுநேர விருந்துபசார நிகழ்வொன்றின் போது, சுமித் பிரசன்ன மதுரங்க என்ற இளைஞன் உயிரிழந்தமைக்குக் காரணமாகவிருக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யுமாறு, எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, நேற்று புதன்கிழமை (27), பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேற்படி இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போது, சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன.
சம்பவத்தின் போது உயிரிழந்த இளைஞனின் மனைவியும் இதன்போது சாட்சியமளித்ததுடன், தனது கணவரின் கொலையில் இரத்தினபுரி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டீ.டபிள்யூ.சி.தர்மரத்ன மற்றும் எம்பிலிப்பிட்டிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவிருந்த பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஆர்.ஜே.டயஸ் ஆகியோரும் தொடர்புபட்டுள்ளனர் எனச் சாட்சியமளித்தார்.
இந்நிலையிலேயே, மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்து, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறுபொலிஸாருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, எம்பிலிப்பிட்டிய மோதல் விவகாரத்தின் போது பொலிஸ் அவசர அழைப்பான 119க்கு, பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகிய இருவரே, அழைப்புக்களை மேற்கொண்டு தகவல் வழங்கியுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று (27) தெரிவித்தார்.
4 minute ago
10 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
11 minute ago