S.Renuka / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவசர சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றிச் சென்ற எயார் அம்பியூலன்ஸ் விமானம் (Beechcraft C90) விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு சென்ற 'ரெட்பேர்ட் எயார்வேஸ்' நிறுவனத்தின் எயார் அம்பியூலன்ஸ் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை (23) மாலை 7.11க்குப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம், சத்ரா மாவட்டத்தின் சிமரியா அடர்ந்த வனப்பகுதியில் சிதைந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
நோயாளி சஞ்சய் குமார் (41), அவருடன் சென்ற மருத்துவக் குழுவினர் மற்றும் விமானிகள் என எவரும் உயிர் பிழைக்கவில்லை.
விபத்து நடந்த இடம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், இரவு நேரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இன்று காலைக்குள் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தீப்பிடித்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
உயிரைக் காக்கச் சென்ற பயணமே விபரீதத்தில் முடிந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago