Editorial / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9:30 மணிக்கு இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) முன்பாக அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் (PDA) அறிவித்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய 'ஒற்றை-இரட்டை' (Odd-Even) எரிபொருள் விநியோக முறையினால் நிரப்பு நிலைய ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இது ஒட்டுமொத்த விநியோகத் துறையையும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தற்போதைய எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி, கூட்டுத்தாபனங்களுக்கு 6 சதவீத இயக்க இலாபம் வழங்கப்படுகிறது. முன்னதாக எரிபொருள் நிலையங்களுக்கு 3 சதவீத இலாபப் பங்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் இந்த இலாபப் பங்கு நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும், டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகத்தில் நிலவும் தொடர்ச்சியான தாமதங்கள் மற்றும் விநியோகத் தோல்விகளால் நிரப்பு நிலையங்களை முறையாக இயக்க முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.
இந்த விவகாரங்கள் நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் நிலையங்களின் நிலைப்புத்தன்மையைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக எச்சரித்துள்ள சங்கம், இதற்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago