Editorial / 2019 ஜூலை 14 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
6. துஷித குமார டீ சில்வா
திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து, பேருவளை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருளில் மண்ணெண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பேருவளை- ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளர், சஞ்சீவ சம்பத் தெரிவித்தார்.
திருகோணமலையிலிருந்து பேருவளைக்கு கொண்டுவரப்பட்ட 9900 லீற்றர் பெற்றோல்,3300 லீற்றர் டீசல் என்பவற்றில் மண்ணெண்ணெய் கலக்கப்பட்டிருப்பதாக, கிடைக்கப் பெற்ற அநாமதேய தொலைபேசி அழைப்புக்கமைய, முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது, இந்த விடயம் உறுதியானதாகவும் இதனையடுத்து, இந்த எரிபொருளை தாம் பொறுப்பேற்காது, இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு, செய்த முறைப்பாட்டுக்கு அமைய, நேற்றைய தினம் இந்த நிறுவனத்தின் அதிகாரியொருவர் எரிபொருள் நிலையத்துக்கு வருகைத் தந்து எரிபொருள் மாதிரியை எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago