2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எரிபொருளை பதுக்கிய ஒருவர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் எரிபொருள் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்  பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதற்கமைய  முல்லைத்தீவு செம்மலை,பகுதியில் வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த எரிபொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

குறித்த வீட்டில் இருந்த 45 லீற்றர் டீசல், 21 லீற்றர் பெட்றோல் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன்,  50 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட பெருங்குற்றப்பிரிவினரின் நடவடிக்கையில் குறித்த நபர் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X