2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படவுள்ளது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

QR குறியீடு ஊடாக எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுக்கும் வகையில்> புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எரிபொருளை பெற்றுக்கொள்ளும் போது கிடைக்கும் குறுஞ்செய்தியில், எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீட்டை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேப்போல் தனியார் மற்றும் அரசதுறைகளில் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க இந்த வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்..

சுற்றுலா எரிபொருள் அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனங்கள் அல்லாத பிரிவினருக்கு எரிபொருள் வழங்கும் செயல்முறையும் அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .