2025 ஜூலை 05, சனிக்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Editorial   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா – தொம்பே – கிரிதர பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்று (05) இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

முகத்தை முழுவதுமாக மறைத்துக்​கொண்டு மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இரு நபர்களாலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர்கள், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை பார்க்கும் உழியர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .