Freelancer / 2026 மார்ச் 16 , பி.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் பெறுவதற்காக வரிசையை மீறி வருபவர் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
சில சாரதிகள் வரிசையை மீறி எரிபொருள் பெற முயற்சிக்கும் போது அமைதியற்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே, வரிசைக்கு புறம்பாக வருபவர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும், பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.
சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் நடைபாதைகளில் நிற்பதால் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைத்து சாரதிகளும் பொறுமையுடன் செயற்படுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதன்போது மேலும் கேட்டுக்கொண்டார். R
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago