2026 மே 02, சனிக்கிழமை

எருமை மாட்டுடன் மோதிய பொலிஸாருக்கு படுகாயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்ந

திருகோணமலை - கண்டி பிரதான வீதி 97 ஆம் கட்டை பகுதியில், எருமை மாட்டுடன் மோதியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளது.

குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வீதியில் குறுக்கே வந்த எருமை மாட்டுடன் மோதி  படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இரண்டு பேரில் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் கன்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .