2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

எலும்புக்கூடு முழுமையாகவுள்ளது

Kogilavani   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தினது எலும்புக்கூடு, முழுமையாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம், குறித்த சடலம், பொலித்தீன் உறையொன்றினால் முழுமையாகச் சுற்றிவைக்கப்பட்டிருந்தது. இதனாலேயே, சடலத்தைத் தோண்டி எடுக்கும்போது அதன் எலும்புக்கூடு முழுமையாக இருந்தது” என சடலம் தோண்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்த அரச தரப்பு சட்டத்தரணி சீ.ரணகல தெரிவித்தார்.

சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த லசந்த விக்கிரமதுங்கவை, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய டாக்டர் மொஹான் சில்வாவின் அறிக்கைக்கும் அவரது மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கும் இடையே, பரஸ்பர வேறுபாடு காணப்படுகின்றது. அதனால் தான், இது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட படுகொலையா? அல்லது வெளிநாடொன்றிலிருந்து தருவிக்கப்பட்ட கூரிய ஆயுதமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட மரணமா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

அவ்வாறு, ஆயுதமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாயின், அவ்வாயுதம் தொடர்பில் கண்டறிவது அவசியமாகும். இவ்வாறான காரணங்களுக்காகவே, குறித்த சடலத்தை மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .