2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

எல்பிட்டிய பிரதேச சபை தலைவர் பதவியேற்பு

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபை தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர்  பதவியேற்றனர்.

தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே முன்னிலையில் இந்த நிகழ்வு இன்று (18) முற்பகல் இடம்பெற்றது.

எல்பிட்டி பிரதேச சபையின் புதிய தலைவராக கருணாசேன பொன்னம்பெரும நியமிக்கப்பட்டுள்ளதுடன்,  உப தலைவராக நாகொட ஜயசேன பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற எல்பிட்டி பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிப்பெற்றது.

அந்தத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .