2025 ஜூலை 05, சனிக்கிழமை

எல்ல வனப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக பரவும் தீ

Freelancer   / 2025 ஜூன் 25 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக எல்ல சுற்றுலாப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வன பாதுகாப்பு அதிகாரிகளால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தியத்தலாவ இராணுவ முகாமை சேர்ந்த அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த வனப்பகுதிக்கு அருகில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குப்பைகளுக்கு தீ வைக்க முயற்சித்த போது கவனக்குறைவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இப்பகுதியில் ஏலவே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டு பாரியளவான வனப்பகுதி அழிவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .