Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / -0001 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில், எதிர்வரும் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (16) அறிவித்தது.
கொழும்பு, கண்டி, ஹாலி எல மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 வாக்காளர்களால், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில், நேற்றைய தினம் அறிவிக்கப்படும் என, நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே, அந்தத் தீர்மானம், 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என, நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இதேவேளை, மேற்படி வாக்காளர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்கவோ அல்லது அதில் தலையிடுவதற்கோ அனுமதி வழங்குமாறு, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே) அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புகள் பல ஒன்றிணைந்து தாக்கல் செய்த மனுவையும், விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில், 22ஆம் திகதி அறிவிப்பதாக, நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
இந்த மனுவை, கபே அமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சிலவும் இணைந்தே தாக்கல் செய்திருந்தன.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குவதன் மூலம், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பிற்போடுவதே நோக்கம் எனவும், அதற்கான சதி முயற்சியாகவே அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
“எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டு 9 மாதங்கள் கடந்த நிலையில் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது, வாக்காளர்களின் உரிமையைப் பறிப்பதாகும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
21 minute ago
23 minute ago