2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

ஏனைய மாவட்டங்களுக்கும் ஊரடங்கு நீட்டிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய தினம் காலை 06 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு  ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த 19 மாவட்டங்களுக்கும் மீண்டும் ஏப்ரல் 6ஆம் திகதி காலை 6.00 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 06 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்தப்பட்டு, பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது..

இதேவேளை, கொரோனா வைரஸ் தொடர்பில் அவதான மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் இன்றி மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .