Niroshini / 2018 மார்ச் 21 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர், புதிய நிலையியற் கட்டளைகள் அமுல்படுத்தப்படுமெனத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அதன்பின்னர், இதுவரையிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏற்படாது என்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த கேள்வியெழுப்பியிருந்தார்.
அக்கேள்விக்கு, ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க பதிலளித்தார்.
குறுக்குக் கேள்வியொன்றை எழுப்பிய அசோக்க பிரியந்த எம்.பி, “என்னுடைய இந்தக் குறுக்குக் கேள்விக்குப் பதிலளிப்பதற்காக, அதனை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவே பதிலளிப்பீர்கள். இது எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்” என, சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இதன்போது பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய நிலையியற் கட்டளைகள், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். இந்த விவகாரம் தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். அதனடிப்படையில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது பிரதியமைச்சர் சபையில் இருப்பார்” என்றார்.
3 hours ago
6 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
26 Jan 2026